மேற்குவங்கத்தில் மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலி; 17 பேர் கவலைக்கிடம்

மேற்குவங்கத்தில் மர்ம நோய்க்கு 8 குழந்தைகள் பலி; 17 பேர் கவலைக்கிடம்
Updated on
1 min read

மேற்குவங்க மாநிலத்தில் மர்ம நோய் தாக்கி கடந்த இரு தினங்களில் 8 குழந்தைகள் பலியாகினர். 17 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மால்டா மருத்துவக்கல்லூரி துணை வேந்தர் கூறுகையில், நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் அனைவருக்கும் 1 முதல் 6 வயதே இருக்கும். மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அனைத்து குழந்தைகளுக்கு அதிக காய்ச்சலுடன் வாந்தி, வலிப்பு ஆகியன இருந்தன. அவர்கள் அனைவரும் மால்டா மாவட்டம் காலியாசக் -1, காலியாசக்- 2, காலியாசக்- 3 பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தொடர்ந்து வலிப்பு ஏற்பட்டதால் குழந்தைகள் அடுத்தடுத்து பலியாகினர் என்றார்.

மேலும், கொல்கத்தாவில் இருந்து மருத்துவக் குழு ஒன்று விரைந்துள்ளதாகவும். அவர்கள் நோய்க்கூறு குறித்து ஆராய இருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in