

ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட்டதால் தெலுங்கு பேசும் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயம் ஆற காலம் எடுக்கும் என சட்டமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் ஆற்றிய உரை:
ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா உருவாக்கப்பட்டதால் தெலுங்கு பேசும் மக்கள் மனங்களில் ஏற்பட்ட காயம் ஆற காலம் எடுக்கும். அறிவியல்பூர்வமற்ற பிரிவினை தெலுங்கு மக்கள் மத்தியில் நீங்காத தழும்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு அடுத்து 15 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். வெளிப்படையான நல்லாட்சி வழங்குவதே ஆந்திர மாநில அரசின் கடமையாகும். ஆந்திர மாநிலத்தை ஸ்வர்ண பூமியாக மாற்றுவதே லட்சியமாகும். மாநில மக்கள் அனைவரும் இந்த லட்சியத்தை நோக்கி செயல்பட வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் நலன் பேணப்படும். நீர்பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயிகளின் துயர் துடைக்கப்படும். பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
ஆந்திர மாநிலத்தில் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தகவல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மாநிலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கப்பு இன மக்களுக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தப்படும்.
பெரிய அளவில் நடைபெற்ற ஊழல்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்தன. ஊழல் தடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படும். மகளிர் முன்னேற்றத்திற்கு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆந்திர மாநிலத்திற்கு புதிய தலைநகர் குறித்து இன்னும் முடிவு செய்யப்பட்டவில்லை என்றார்.