

ஆந்திர மாநில புதிய தலைநகராக உருவாகும் அமராவதியில் நேற்று ஜப்பான் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அமராவதியில் உள்ள வெலகபூடி பகுதியில் ஆந்திர மாநில தலைமை செயலகம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இப்பணி களை நேற்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜப்பான் நிபுணர் குழுவினருடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அடிப்படை வசதிகளுடன் உருவாகும் குடியிருப்பு பகுதிகள், தொழிற்சாலைகள் அமையும் இடங்கள் ஆகிய உள்கட்டமைப்பு திட்டப் பணிகளையும் மேற் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் உடன் இருந்தனர்.