பாஜகவால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து: சோனியா காந்தி குற்றச்சாட்டு

பாஜகவால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து: சோனியா காந்தி குற்றச்சாட்டு
Updated on
1 min read

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சூரில் இன்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கத்துக்கு கேரளா முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. ஆனால் தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளால் மதச்சார்பின்மைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மதவாத சக்திகளுக்கு எதிராக போரிட்டு வெல்ல வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தில் நல்லாட்சி நடைபெற்றுள்ளது. எனவே மீண்டும் காங்கிரஸுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்'' என்று சோனியா காந்தி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in