

மேகாலயாவின் கரோ பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 4 பேர் பலியாகினர். இவர்களில் மூவர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், நிலச்சரிவு காரணமாக கரோ பகுதியில் உள்ள முக்கிய பாலங்கள் சேதமடைந்துள்ளன. இதில் ஜெபல்கிரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.கரோனாவின் பிற பகுதிகளான துரா, தாலு, புராகாஸியா ஆகிய பகுதிகளும் கனமழையினால் பலத்த சேதம் அடைந்துள்ளன. அடுத்த சில நாட்களுக்கு இப்பகுதியில் கனமழை பெய்யும் என்று வானிலை அறிஞர்கள் கூறியிருப்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
கனமழையினால் எராளமான கால் நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.
கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா கரோ பகுதிக்கு செல்கிறார்.