வினாத் தாள் கசிவு: உ.பி. மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து

வினாத் தாள் கசிவு: உ.பி. மருத்துவ நுழைவுத் தேர்வு ரத்து
Updated on
1 min read

உத்தரப்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு, வினாத் தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

காசியாபாத்தில் வங்கி ஒன்றில் கேள்வித் தாள்கள் கொண்ட 40 அட்டைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2 பெட்டிகளில் ‘சீல்’ உடைக்கப்பட்டு பெட்டிகளும் சேதமடைந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்வு ரத்து செய்யப்பட்டது. -

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in