Last Updated : 23 May, 2016 08:43 PM

 

Published : 23 May 2016 08:43 PM
Last Updated : 23 May 2016 08:43 PM

காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு அடுத்த ரயிலில் முன்னுரிமை: விகல்ப் திட்டம் விரிவாக்கம்

ஒரு குறிப்பிட்ட ரயிலில் பயணிப்பதற்காக முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருப்போருக்கு அடுத்த ரயிலில் முன்னுரிமை வழங்கும் விகல்ப் திட்டம் மேலும் சில ரயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

டெல்லி-ஜம்மு மற்றும் டெல்லி-லக்னோ ஆகிய வழித்தடத்தில் மட்டும் விகல்ப் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் இயக்கப்படும் அடுத்த ரயிலில் படுக்கை வசதி உறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டம் இப்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை, டெல்லி-சென்னை, டெல்லி-பெங்களூரு மற்றும் டெல்லி-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

விகல்ப் திட்டம் மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் ரயில்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.

விகல்ப் திட்டத்தின் கீழ் மாற்று ரயிலில் ஒதுக்கீடு பெற்ற பயணிகள், பயணத்தை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதேபோல், வித்தியாச கட்டணத் தொகை திருப்பித் தரப்படவும் மாட்டாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x