

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு இயற்றிய சட்டங்களை கேரள அரசு அமல்படுத்தவில்லை என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கண்ணூர் மாவட்டத்தில் இரு பழங்குடியின சிறுவர்கள் குப்பைத் தொட்டியில் இருந்து உணவை எடுத்து உண்பது போல வெளியான பத்திரிகைச் செய்தியை சுட்டிக் காட்டி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி, மோடி கேரளாவை அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். மோடி அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அந்தப் பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், சாண்டிக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் பேசியதா வது: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சகோதரர்களுக்காக மத்திய அரசு பல சட்டங்களை இயற்றியுள்ள து. ஆனால், அவை கேரளா வில் அமல்படுத்தப்படவில்லை. இது கேரளாவை அவமதிப்பது இல்லையா. தேர்தலை மனதில் கொண்டே மலையாளிகளின் பெருமை காயப்படுத்தப்பட்டதாக சாண்டி பிரச்சினை எழுப்புகிறார் . அட்டப்பாடியில் ஊட்டச்சத்து குறைபாடால் 143 குழந்தைகள் உயிரிழந்ததை முதல்வர் மறந் துவிட்டாரா? பட்டினியால் குழந்தைகள் இறப்பதைத் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை குறித்து சாண்டி விளக்க வேண்டும்.
இவ்வாறு ராஜசேகரன் தெரிவித்தார்.