

போன் தர மறுத்ததால் கேரள மாநிலம் கொல்லம் அருகே கோட்டைக்ககம் கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலைசெய்துகொண்டார்.
ரதீஷ்-சிந்து தம்பதியரின் மகளான ஷிவானிதான் தற்கொலைசெய்துகொண்டது. நேற்று இரவு சமூக ஊடக நட்பு தொடர்பாக அம்மா-மகளுக்கு இடையில் வாக்குவாதம் நடந்துள்ளது. அதைத் தொடர்ந்து போன் பார்க்க அம்மா அனுமதி மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷிவானி, தாங்கள் வசித்துவந்த வாடகை வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார். இவர் கொல்லம் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வந்தார். சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் மர்ம மரணமாகப் பதிவுசெய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன்பு யூடியூப் வீடியோவால் கேரள மாநிலம் திருவனந்தபுரம் கல்லம்பலத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி, ஜீவா மோகன் தற்கொலை செய்துகொண்டார்.
கீதா, கொரியன் பாண்ட் வீடியோக்களின் அடிமையாக இருந்துள்ளார். இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாமல் மன ரீதியான பிரச்சினைக்கும் ஆளாகியிருப்பதாகத் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனது தற்கொலைக்கான காரணம் இதுதான் அவர் குறிப்பை எழுதிவைத்திருக்கிறார். இந்திய மாணவர்கள் ஒரு நாளைக்கு 150 முறை தங்களது ஸ்மார்ட்போனை பார்ப்பதாக இந்திய சமூக அறிவியல் கழகத்தின் அறிக்கை சொல்கிறது. மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் மாணவர்களில் 63 சதவீதத்தினர் நான்கு மணி நேரத்திலிருந்து 7 மணி நேரம் வரை அதைப் பார்ப்பதாகச் சொல்கிறது அந்த குறிக்கை. தேசிய மனநல ஆராய்ச்சிக் கழகம் இதை ஒரு நோய் எனச் சொல்லியிருக்கிறது.