Published : 05 Jun 2022 06:26 AM
Last Updated : 05 Jun 2022 06:26 AM

பாஜகவின் நன்கொடை 79% குறைந்தது

புதுடெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டை ஒப்பிடும் போது பாஜக பெற்ற நன்கொடை 79 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 2020-21-ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாஜகவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.762.33 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த 2019-20-ம் நிதியாண்டில் ரூ.3,623.28 கோடியை பாஜக நன்கொடையாக பெற்றது. இதை ஒப்பிடும்போது பாஜக பெற்ற நன்கொடை 79 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2019-20 நிதியாண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.2,555 கோடியை நன்கொடையாக பெற்றது. ஆனால் 2020-21-ம் நிதியாண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.22.38 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

கடந்த 2019-20-ம் நிதியாண்டில் பாஜக சார்பில் ரூ.1,352 கோடி செலவிடப்பட்டது. 2020-21-ம் நிதியாண்டில் அந்தக் கட்சி தரப்பில் ரூ.421.01 கோடி மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது. இதன்படி கடந்த 2019-20 நிதியாண்டைவிட பாஜகவின் செலவினம் 62 சதவீதம் குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x