Published : 13 Jun 2014 09:12 AM
Last Updated : 13 Jun 2014 09:12 AM

தீவிரவாத தாக்குதல் அபாயம்: அயோத்தி, வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு - உளவு அமைப்புகள் எச்சரிக்கையால் நடவடிக்கை

தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் தகவல் கள் எச்சரித்துள்ளதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய ஆலய நகரங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட உள்ளது.

உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தலைமையில் வியாழக் கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப்பிரிவு தலைமை இயக்குநர் திலீப் திரிவேதி, உத்தரப் பிரதேச காவல்துறை இயக்குநர் ஏ.எல்.பானர்ஜீ, உள்துறை முதன் மைச் செயலர் தீபக் சிங் சிங்கால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற இந்த ஆலய நகரங்களில் புதிய பாதுகாப்பு ஏற்பாட்டின்படி கண்காணிப்பு கேமராக்கள், மின்னணு சாதனங்கள் ஆங்காங்கே நிறுவப்படும்.

இந்த நகரங்களில், தீவிரவா திகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டி ருந்தால் அதை முறியடிக்க இரவு பகல் முழுவதும் விழிப்புடன் இருக் கும்படியும், கூடுதல் எண்ணிக் கையில் வீரர்களை பணியில் அமர்த் துமாறும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அயோத்தியும் வாரணாசியும் இதற்கு முன்னர் தீவிரவாத தாக் குதலை எதிர்கொண்ட நகரங்கள் ஆகும்.

2005ம் ஆண்டு ஜூலை 5 ம் தேதி அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வளாகத்தில் அமைந்துள்ள ராமர் ஆலயம் மீது 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தாக்குதல் நடத்தி 5 பேரையும் சுட்டு வீழ்த்தினர். கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் இறந்தார்.

வாரணாசியில் 2006 ஜூலையில் ஆரத்தி வழிபாடு நடந்தபோது 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x