தகுதியிழந்த எம்எல்ஏ.க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

தகுதியிழந்த எம்எல்ஏ.க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு
Updated on
1 min read

உத்தராகண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் விஜய் பஹுகுணா உட்பட, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அண்மையில் பாஜக.வில் இணைந்தனர். இதன் பிறகு, 9 பேரின் பெயர்களும், மத்திய விஐபி பாது காப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அவர்களின் உயிருக்கு அச்சுறுத் தல் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 9 பேருக்கும், ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வரையறுக்கப்பட் டுள்ளது. இதற்கான விதிப்படி, ஒரு தானியங்கி ஆயுதத்துடன், 2 அதி காரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடு பட வேண்டும். ஆனால் தகுதியிழந்த எம்எல்ஏ.க்கள் 9 பேரையும், 8 முதல் 10 கமாண்டோப் படையினர், பாதுகாத்து வருகின்றனர்.

அதேபோல், எம்எல்ஏ.க்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் பட்சத்தில், மத்திய துணை ராணுவப் படையில் இருந்து வீரர்களை பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தலாம். ஆனால், இந்த 9 எம்எல்ஏ.க்களுக்கு, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பிரிவில் இருந்து கமாண்டோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in