Last Updated : 02 May, 2016 10:20 AM

 

Published : 02 May 2016 10:20 AM
Last Updated : 02 May 2016 10:20 AM

பிரதமர் நரேந்திர மோடி எம்.ஏ. பட்டதாரி: 62% மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி- குஜராத் பல்கலைக்கழகம் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில் 62.3 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று குஜராத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் வாக்காளர் அட்டை விவரங்களைக் கோரி நீரஜ் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித் தார். இதுதொடர்பாக தலைமை தகவல் அதிகாரி தர் ஆச்சார் யலு, முதல்வர் கேஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இதற்கு பதில் அனுப்பிய கேஜ்ரிவால், என் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வெளிப்படுத்த விரும்புகிறீர்கள். அதற்கு நான் ஆட்சேபம் தெரி விக்கவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி தகவல்களை நீங்கள் மறைக்க முயல்வது ஆச்சரியமாக இருக் கிறது. இது தகவல் ஆணையத் தின் நடுநிலைத் தன்மையில் சந்தே கத்தை ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில், 1978-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம், 1983-ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றிருப்பதாக குறிப்பிட் டுள்ளார். இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பலர் விண்ணப்பித்தபோது பதில் அளிக்கப்படவில்லை. இதை குறிப்பிட்டே தேர்தல் ஆணையத் திடம் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் பி.ஏ., எம்.ஏ., பட்டம் தொடர்பான விவரங்களை அளிக்குமாறு டெல்லி பல்கலைக் கழகம், குஜராத் பல்கலைக்கழகத் துக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதுகுறித்து குஜராத் பல் கலைக்கழக துணை வேந்தர் எம்.என். படேல், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி 1983-ம் ஆண்டில் தொலைநிலைக் கல்வி மூலம் எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்தில் 62.3 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். எம்.ஏ. முதலாமாண்டில் 400-க்கு 237 மதிப்பெண்களும் இரண்டாம் ஆண்டில் 400-க்கு 262 மதிப்பெண் களும் பெற்றுள்ளார்.

தகவல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை. ஊடகங் களின் வாயிலாகவே செய்தியை அறிந்து விவரங்களை தேடி எடுத்தோம்.

தகவல் ஆணைய நோட்டீஸ் கிடைத்த பிறகு உரிய தகவல் களை அளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x