

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள எஸ்.ஜி.டி. கல்லூரியில் பி.காம் படித்து வரும் (ஒரே வகுப்பு) மாணவிகள், நேர்முகத் தேர்வில் பங்கேற்பதற்காக கடந்த வியாழக்கிழமை பெங்களூரு சென்றுள்ளனர்.
தேர்வை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு கர்நாடக அரசு பேருந்தில் பெல்லாரிக்கு புறப்பட்டனர். நேற்று அதிகாலை சித்ரதுர்கா மாவட்டம் செள்ளிக்கெரே அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேன் மோதியது. இதைத் தொடர்ந்து எதிரே வந்த லாரியும் மோதியது.
இந்த தொடர் மோதல் விபத்தில் எஸ்.ஜி.டி. கல்லூரி மாணவிகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 10-க்கும்
மேற்பட்டோர் சித்ரதுர்கா பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதில் சில மாணவிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செள்ளிக்கெரே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.