

உத்தராகண்ட் சட்டப்பேரவையில் வரும் 10-ம் தேதி நம்பிக்கை வாக் கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எனினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக் கள் வாக்கெடுப்பில் பங்கேற்க நீதி பதிகள் அனுமதி அளிக்கவில்லை.
உத்தராகண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து மாநில உயர் நீதிமன்றத்தில் ஹரிஷ் ராவத் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான அமர்வு, குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து ஏப்ரல் 29-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் ஆகியோர் அடங் கிய அமர்வு, உயர் நீதிமன்ற உத்தர வுக்கு இடைக்கால தடை விதித்து மாநிலத்தில் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்தது.
பல கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு வருமாறு:
உத்தராகண்ட் சட்டப்பேரவை யில் வரும் 10-ம் தேதி காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதில் ஹரிஷ் ராவத் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 1 மணி முதல் மீண்டும் அமலுக்கு வரும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நட வடிக்கைகள் அனைத்தையும் வீடி யோவில் பதிவு செய்ய வேண்டும். அதன் முடிவுகளை மே 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீலிட்ட உறை யில் தாக்கல் செய்ய வேண்டும். இவ் வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஹரிஷ் ராவத்துக்கு சாதகம்
உத்தராகண்ட் சட்டப்பேரவை யில் மொத்தம் 70 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 9 பேரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க நீதிபதி கள் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவையின் பலம் 61 ஆகக் குறைந்துள்ளது.
எனவே 31 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே ஹரிஷ் ராவத் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுவிட முடியும். ஆளும் காங்கிர ஸுக்கு அவையில் 27 உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் முற்போக்கு ஜனநாயக முன்னணியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை பெற்றுவிடும் என்று கூறப்படுகிறது.