“மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது 8 ஆண்டு கால அரசு” - பிரதமர் மோடி

“மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகிறது 8 ஆண்டு கால அரசு” - பிரதமர் மோடி
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த எட்டு ஆண்டு காலமாக தங்கள் ஆட்சியின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் இதனை தெரிவித்துள்ளார்.

தங்களது ஆட்சி காலத்தில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை narendramodi.in வலைதளத்திலும், நமோ செயலியிலும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், "கடந்த எட்டு ஆண்டுகள் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய பயன்பட்டது. சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகளின் நலன் என்ற எங்களது குறிக்கோளை பூர்த்தி செய்ய நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். நமோ செயலியில் உள்ள முன்னேற்றப் பயணம் பற்றிய பிரிவு, உங்களை இந்த வளர்ச்சிப் பயணத்திற்கு அழைத்து செல்லும்.

#8YearsOfSeva பற்றிய எந்த ஒரு பிரிவையும் நமோ செயலி விட்டுவிடவில்லை. புதுமையான வழிகளில் அது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதனை காணுமாறு உங்கள் அனைவரையும், குறிப்பாக எனதருமை இளம் நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த 2014, மே 26 அன்று பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து கடந்த 2019, மே 30 அன்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in