Published : 30 May 2022 05:13 AM
Last Updated : 30 May 2022 05:13 AM

குண்டூரில் 'அண்ணா கேன்டீன்': நடிகர் பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார்

குண்டூர் ஜேகேசி சாலையில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடிகர் பாலகிருஷ்ணா நேற்று தொடங்கி வைத்த அண்ணா கேன்டீன்.

குண்டூர்: தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்றபோது, ஆந்திராவிலும் அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

தேர்தலுக்கு சுமார் 6 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த கேன்டீன்கள், குறிப்பாக ஏழை, எளியவர்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்தது. ஆனால், தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வி அடைந்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அண்ணா கேன்டீனும் மூடுவிழா கண்டது. இதேபோன்று தெலுங்கு தேசம் சார்பில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன.

தற்போது, மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்ததால், கட்சி மாநாடும் ஓங்கோலில் சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, குண்டூரில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புதிய அண்ணா கேன்டீன் தொடங்கப்பட்டது.

இதனை என். டி. ராமாராவின் மகனும், நடிகருமான பாலகிருஷ்ணா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறும்போது, "மக்களுக்கு தேவையான பல திட்டங்களை ஜெகன் அரசு ரத்து செய்து விட்டது. இறுதியில் குப்பைக்கு கூட ஆந்திராவில் மக்கள் வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். நிச்சயம் மாறும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x