பஞ்சாபில் 424 விஐபிக்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

பஞ்சாபில் 424 விஐபிக்களின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
Updated on
1 min read

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் முன்னாள் எம்எல்ஏ.க்கள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், மதத் தலைவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை அறிவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக விஐபிக்கள் 424 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. பலருக்கு பாதுகாப்பு முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

குறிப்பாக 2 சீக்கிய மத அமைப்புகளின் தலைவர்கள், தேராக்களின் தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள், முன்னாள் எம்எல்ஏ.க்கள், எம்எல்ஏ.க்கள் உட்பட 424 பேரின் போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக போலீஸ் கூடுதல் டிஜிபி (பாதுகாப்பு) நேற்று அறிவித்தார். அவர் கூறும்போது, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு தேவைப்படுவதால் தற்காலிகமாக விஐபிக்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது” என்றார்.

சீக்கிய மத அமைப்பின் தலைவர்கள் கியானி ஹர்பிரீத் சிங், தம்தமா சாஹிப் ஆகியோரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் 184 விஐபி.க்களின் போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in