Published : 29 May 2022 05:00 AM
Last Updated : 29 May 2022 05:00 AM
புதுடெல்லி: மாற்றுத் திறனாளி சிறுவனும், அவனது பெற்றோரும் ஹைதராபாத் செல்ல இந்த மாத தொடக்கத்தில் ராஞ்சி விமான நிலையம் வந்தனர். அப்போது அங்கிருந்த இண்டிகோ விமான அதிகாரி, அந்த சிறுவன் இயல்புக்கு மாறாக நடந்து கொள்கிறான். அவனை விமானத்தில் பயணிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். தங்கள் மகன் மாற்றுத் திறனாளி குழந்தை என்றும் அவன் இயல்பாகவே இருக்கிறான் என்றும் சிறுவனின் பெற்றோர் விளக்கியுள்ளனர். அதன் பிறகும் அந்த அதிகாரி அவர்களை அனுமதிக்கவில்லை.
இந்நிகழ்வை நேரில் பார்த்த ஒருவர், இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அது வைரலானது. தகவல் அறிந்து விமானப் போக்குவரத்துக் கழகம் விசாரணை நடத்தி, ‘மாற்றுத் திறனாளி சிறுவனை இண்டிகோ விமான அதிகாரி நடத்திய விதம் சரியானது அல்ல. இரக்கத்துடன் நடந்திருந்தால் சிறுவன் அமைதி அடைந்திருப்பான்’ என்று கூறி ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT