மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்: தோல்வியை ஒப்புக்கொண்டார் முதல்வர் தருண் கோகோய்

மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்: தோல்வியை ஒப்புக்கொண்டார் முதல்வர் தருண் கோகோய்
Updated on
1 min read

அசாம் முதல்வர் தருண் கோகோய் காங்கிரஸ் அரசின் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தருண் கோகோய் கூறியதாவது:

மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். மூன்று முறை ஆட்சியமைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எங்களை அமரவைக்க மக்கள் விரும்பியுள்ளனர்.

அதற்காக மக்களுக்கு நன்றி கூறுகிறேன். முடிவுகளை நினைத்து வருந்துவது இயல்பானதுதான். ஆனால் நான் தளர்ந்துவிடவில்லை. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸை மக்கள் முற்றிலும் கைவிட்டுவிடவில்லை. எங்கள் தரப்பில் சில குறைகள் இருந்திருக்கலாம். அல்லது மக்கள் நாங்கள் செய்ததை விட இன்னும் அதிகமாக எதிர்பார்த்திருக்கலாம். பாஜக கூட்டணி வெற்றிக்காக சர்பானந்த சோனோவாலை வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in