Last Updated : 11 May, 2016 10:05 AM

 

Published : 11 May 2016 10:05 AM
Last Updated : 11 May 2016 10:05 AM

டெல்லியில் புதிய டீசல் கார்கள் பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடை: உரிமம் காலாவதியாகும் வரை பழைய கார்களுக்கு அனுமதி

டெல்லியில் புதிய டீசல் கார்களை (வாடகைக் கார்) பதிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பழைய கார்கள், உரிம காலம் முடியும் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோ ரடங்கிய அமர்வு, “டெல்லியில் புதிய டீசல் கார்கள் (வாடகைக் கார்கள்) பதிவு செய்யப்படக் கூடாது. அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு அல்லது பெட்ரோல் என இரண்டு எரிபொருள் அல்லது இவற்றில் ஏதேனும் ஓர் எரிபொருளில் இயங்கும் வாடகைக்கார்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும். புதிய டீசல் கார்கள் (வாடகை) பதிவு செய்யக்கூடாது என்பதை மீண்டும் தெளிவாகக் கூறுகிறோம்” என உத்தரவிட்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் அனைத்து இந்திய உரிமம் பெற் றுள்ள டீசல் கார்கள் (ஏஐடிபி) டெல்லியில் தங்கள் உரிமம் காலா வதியாகும் வரை இயங்கலாம். ஆனால், உரிமம் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக வழங்கப்படும் அனைத் திந்திய உரிமம் ஏஐடிபி-என் என அடையாளப்படுத்தப்படும். பிபிஓ போன்ற சேவை நிறுவனங்களுக் கான சேவையில் உள்ள ஏற் கெனவே ஏஐடிபி உரிமம் பெற்ற கார்கள் ஏஐடிபி-ஓ என்ற பெயரில் பாய்ன்ட்-டூ-பாய்ன்ட் சேவையில் ஈடுபடலாம். ஏஐடிபி-என் உரிம தாரர்கள் இச்சேவையில் ஈடுபட முடியாது எனவும் நீதிமன்றம் தெரி வித்துள்ளது. இதன்மூலம், டெல்லி யில் டீசல் கார்களுக்கு தடை விதித்த முந்தைய உத்தரவில் உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது.

இவ்வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “டீசலில் இயங்கும் 64,500 வாடகைக் கார்களுக்கு ஒரே நாளில் தடை விதிப்பது, நிலைமையை சிக்கலாக்கும். அனைத்திந்திய உரிமம் வைத்துள்ள வாடகைக் கார்களுக்கு சில வரையறைகளை மத்திய அரசு விதிக்கலாம். தலை நகருக்குள் பாய்ன்ட்-டூ-பாய்ன்ட் சேவைகளுக்கு புதிய உரிமம் வழங்கலாம்” என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், “நாடு முழுவதும் ஏஐடிபி விதிகள் அமலில் இருக்கும் நிலை யில் தலைநகருக்கு மட்டும் தனி விதி முறை வகுப்பது சிரமம்” என நீதி மன்றத்தில் எடுத்துரைத்திருந்தார்.

எதிர்காலத்தில் பிபிஓ, ஐ.டி. பணியாளர்களுக்காக டீசல் அல்லாத கார்களை மட்டுமே பயன் படுத்துவதற்கு ஒப்பந்தம் மேற் கொள்ளப்படும் என நாஸ்காம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x