

சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டத்துக்கு இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறிய தாவது: “சமீபகாலமாக பொது சிவில் சட்டம் குறித்த சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. பொது சிவில் சட்டத்துக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன்.
‘நாடு முழுவதும் உள்ள குடி மக்கள் பயன்பெறும் வகையில், பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும்’ என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 44-ல் கூறப்பட் டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 64 ஆண்டுகளாகின்றன. ஆனால், இப்போதுவரை 44-வது சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ளது தொடர்பாக எந்தவொரு நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு வாக்கு வங்கி அரசியலே காரணமாகும்.
முஸ்லிம்களின் உரிமைகளுக் காக எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளேன். இன்றைக்கு முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கு, குடியுரிமை சார்ந்த அவர்களுக்கான தனிச் சட்டம், நவீனமயமாக்கப்படாததுதான் காரணமாகும்.
பெரும்பாலான நாடுகளில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள்தான் உள்ளன. இந்தியா வில் கூட குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவான வைதான். முஸ்லிம்களுக்கென்று தனியாக இல்லை. அவற்றில் பல முஸ்லிம்களின் ஷரியா சட்டத்துக்கு எதிராக இருந்தாலும், யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உதாரணத்திற்கு, ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஷரியா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, அது சட்டவிரோதமான செயலாகும்” என்றார் மார்க்கண்டேய கட்ஜு.