ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது - காங். முன்னாள் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறது - காங். முன்னாள் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நேரு மறைந்து 58 ஆண்டுகள் ஆகிறது. அவரது சிந்தனைகள், அரசியல், தொலைநோக்கு பார்வை இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அவரது கொள்கைகள் நம்மை வழிநடத்தும். ஐஐடி, ஐஐஎம், எல்ஐசி, ஐடிஐ, பிஎச்இஎல், என்ஐடி, பிஏஆர்சி, எய்ம்ஸ், இஸ்ரோ, செயில், ஒஎன்ஜிசி, டிஆர்டிஓ ஆகிய அரசு அமைப்புகளை நேரு உருவாக்கினார். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தினார். கடந்த 8 ஆண்டுகளில் நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்தி உள்ளது. அரசு அமைப்புகளை அழித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in