Published : 28 May 2022 07:28 AM
Last Updated : 28 May 2022 07:28 AM

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் யாதவ் மகள் மிசா பாரதி மனுத் தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி வேட்பாளர்கள் மிசா பாரதி மற்றும் பயஸ் அகமது ஆகியோர் பாட்னாவில் உள்ள சட்டப்பேரவையில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். அப்போது அவர்களுடன் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் உடன் வந்தார். படம்: பிடிஐ.

பாட்னா: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்யவந்த மகள் மிசா பாரதியுடன், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் உடன்வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் வெளிவரும் அவரைப் பார்க்க தொண்டர்கள் கூட்டம் கூடியது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் லாலு மகள் மிசா பாரதி மற்றும் முன்னாள் எம்எல்ஏ பயஸ் அகமது, மறைந்த முன்னாள் எம்.பி மொகத் சகாபுதினின் மனைவி ஹினா சகாப் ஆகியோர் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். அவர்களுடன் லாலு பிரசாத் யாதவும் உடன் வந்தார். அவரை அவரது மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி ஆகியோர் கைகளில் தாங்கியபடி அழைத்து வந்தனர்.

லாலு பிரசாத் யாதவ் தள்ளாடியபடி மெதுவாக நடந்து வந்தார். முககசமும் அணிந்து காணப்பட்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின் அவரைப் பார்க்க தொண்டர்கள் கூடியதால் பிஹார் சட்டப்பேரவை வளாகத்தில் கூச்சல் நிலவியது. அவரது குடும்பத்தினர் யாரும் பேட்டியளிக்கவில்லை. லாலுவிடம் வழக்கமான உற்சாகம் இல்லை. கட்சி தொண்டர்களிடமோ, நிருபர்களிடமோ அவர் பேசவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x