Last Updated : 29 May, 2016 09:28 AM

 

Published : 29 May 2016 09:28 AM
Last Updated : 29 May 2016 09:28 AM

கோயில் வருவாயும் மக்களின் சுயநலமும்

ஒரு தனி மனிதரின் எதிர்ப்பால் ஐரோப்பா முழுவதும் கிறிஸ்த வத்தில் திருச்சபை சீர்திருத்தம் ஏற்பட்டு அடுத்த ஆண்டுடன் 500 ஆண்டுகள் நிறைவடைய போகிறது. இந்தியாவில் சமீபத்தில் ஒரே நாளில் வெளியான 2 கட்டுரைகள் அதை எனக்கு நினைவுப்படுத்தின.

‘‘கோயில்களின் வருமானம் 27 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்று ஆந்திராவில் கடந்த 25-ம் தேதி செய்தி வெளியானது. ‘‘கோயில்க ளுக்கு அதிக வருமானம் வருவது மக்களிடம் பாவங்கள் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. மக்கள் பாவங்களை செய்து விட்டு, அவற் றில் இருந்து தப்பிக்க கோயில் களில் காணிக்கை செலுத்துகின் றனர்’’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

அதேநாளில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் ஒரு பத்திரி கையில் ஒரு செய்தி வெளியானது. ‘புனித நீராடல் - 11 ரூபாய்க்கு தோஷம் நீக்கல்’ என்ற தலைப்பில் அந்த செய்தி இருந்தது. சிவன் கோயிலில் உள்ள பூசாரிகள், 11 ரூபாய் தரும் பக்தர்களுக்கு பாவ மன்னிப்பு அல்லது தோஷம் நீக்கப்பட்டதாக சான்றளிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந் தது. இதன் பொருள் எல்லோ ரும் பாவிகள், அப்பாவிகள் கூட என்பதுதான்.

பூசாரி ஒருவர் கூறும்போது, ‘‘மக்கள் விவசாயம் செய்யும் போது, தற்செயலாகவே பூச்சிகள், ஊர்வனங்கள், பறவைகளின் முட் டைகளை கொன்றுவிடுகின்றனர். இது அவர்கள் மனதை உறுத்து கிறது. கனத்த மனதுடன் இங்கு அவர்கள் வருகின்றனர். ஆனால், புனித நீராடிய பிறகு நிம்மதியுடன் செல்கின்றனர்’’ என்கிறார்.

கடவுளின் பெயரால் பூசாரிகள் , மதகுருக்கள் பணம் பெறுவது உலகம் முழுவதும் நடக்கும் விஷயம்தான். நான் தொடக்கத்தில் சொன்னது போல், ஐரோப்பாவில் பணம் பெறுவது 500 ஆண்டுக ளுக்கு முன்பு பெரிய அளவில் நடந்தது.

‘பணத்துக்கு பாவ மன்னிப்பு’ என்ற நடைமுறையை ரோமன் கத்தோலிக்க திருச்சபை கொண்டு வந்தது. அதன்படி, அதிக பணம் தருபவர்கள், அவர்களுடைய இறப்புக்கு பின்னர் பாவங்களில் இருந்து தண்டனை குறைவாக பெறுவார்கள் என்ற சலுகை வழங் கப்பட்டது. இது கடந்த 1517-ம் ஆண்டில் பரவலாக மார்க்கெட்டிங் செய்யப்பட்டது.

அப்போதைய போப், ஒரு பிர தி நிதியை ஜெர்மனிக்கு அனுப்பி, பாவ மன்னிப்புக்காக மக்கள் வழங்கிய பணத்தை வாங்கி வருமாறு அனுப்பினார். ஆனால், போப்பின் இந்த செயலுக்கு ஜெர்மனியில் இருந்த ஒரு மதகுரு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடவுள் நம்பிக்கையை தவறாக பயன்படுத்துவதாக கத்தோலிக்க திருச்சபை மீது குற்றம் சாட்டினார். பணம் வசூலிப்பதற்கு போப்புக்கு அதிகாரம் இல்லை என்று பகிரங்க மாகவே கூறினார். அவருடைய பெயர் மார்ட்டின் லூதர்.

அவருடைய எதிர்ப்பு, போராட் டம் பெரும் இயக்கமாக மாறியது. திருச்சபை சீர்திருத்தம் என்று பெயரிடப்பட்டது. இந்த இயக்கத் தால் கிறிஸ்தவம் இரண் டாக பிரிந் தது. அதன் விளைவு தற்போது ஐரோப்பாவின் பல நாடுகளில் கத்தோலிக்க திருச்சபை இல்லை.

ஐரோப்பாவில் லூதர் கால கட்டத்தில் இருந்தது போலவே இந்தியாவிலும் மதம் என்பது பண்ட மாற்று முறைபோல்தான் இருக்கிறது. ஆசிர்வாதம் பெறுவ தற்காக கோயில்களில் காணிக்கை செலுத்துகிறோம். பணக்காரர்கள் பணம் தருவதில்லை. அவர்கள் தங்கமாக கொடுக்கின்றனர் ஏன்?

ஏனெனில், பணம் கொடுத்தால் அதை பிரசாதம் அல்லது வேறு நலப்பணிகளுக்கு செலவிடுவார் கள். தங்கமாக கொடுத்தால் அது கடவுள் அருகிலேயே இருக்கும் என்பதுதான் காரணம். பக்தர்கள் தங்கத்தை காணிக்கையாக செலுத்த திருப்பதி கோயில் நிர்வாகமும் ஊக்கப்படுத்தியது.

அதன்படி, ஒரு கிலோ தங்கம் கொடுக்கும் பக்தர்கள், வரிசையில் நிற்காமல் நேரடியாக சுவாமி தரிசனம் செய்ய சலுகை வழங்கப்பட்டது. தற்போது, அதிக பணம் தரும் பக்தர்களுக்கும், திருப்பதி கோயில் சலுகைகள் அளிக்கிறது. எவ்வளவு பணம் தந்தால் என்ன சலுகை என்பதை www.tirumala.org/privileges.aspx என்ற இணையதளத்தில் கோயில் நிர்வாகம் பட்டியலிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நான் காசிக்கு சென்றிருந்தேன். அங்கு எதற்கெடுத்தாலும் பணம்தான். மாலையில் நடக்கும் ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கை ஒதுக்குவதற்கு கூட பணம் வசூ லிக்கின்றனர். வெளிநாட்டவருக்கு இன்னும் அதிகமாக கேட்கின்றனர்.

அதை பக்தர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான் இங்கு முக்கியம். பெரிய தொழி லதிபர்கள் அன்பளிப்பு என்ற பெயரில் பெரிய தொகையை வழங்குவது இப்போது மேற்கத் திய நாடுகளி லும் சகஜமாகி விட்டது.

கடந்த 1889-ம் ஆண்டு பிரபல தொழிற்துறை வல்லுநர் ஆண்ட்ரூ கார்னீஜ், ‘காஸ்பல் ஆப் வெல்த்’ என்ற புத்தகம் எழுதினார். அதில், பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை ஏழைகளுக்கு வழங்கி உதவ வேண்டும். பணக் காரனாகவே சாவது அவமானம்’ என்று வாதிட்டார். அவரது கருத் துக்கு பலர் ஆதரவு தெரிவித் தனர். தற்போது மேற்கத்திய நாடுகளில் பெரும் பணக்காரர்கள் தாங்கள் இறப்ப தற்கு முன் தங்கள் செல்வத்தை பல நலத்திட்டங்களுக்கு வழங்கி வருவது வழக்கமாகி விட்டது. எனவே, பில்கேட்ஸ், வாரன் பப்பட் போன்ற தொழிலதிபர்கள் அரிதான மக்கள் அல்லர்.

ஆனால், இந்தியாவில் என்ன நடக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில் நம் எல்லோருக்கும் தெரியும். சுயநலத்துக்காக மதத்தை பார்ப்பதால் ஐரோப்பா வில் நடந்த சீர்திருத்தம் போல் இந்தியாவில் நடக்கவில்லை. அதுபோல் இந்தியாவில் மாற்றம் வருவதற்கு இன்னும் 500 ஆண்டு கள் தேவைப்படாது என்று மட்டும் நாம் நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x