மாநிலப் பிரிவினையால் ஆந்திராவுக்கு ரூ.15,900 கோடி சுமை: சந்திரபாபு நாயுடு

மாநிலப் பிரிவினையால் ஆந்திராவுக்கு ரூ.15,900 கோடி சுமை: சந்திரபாபு நாயுடு
Updated on
1 min read

மாநிலப் பிரிவினையால் ஆந்திரா வுக்கு ரூ. 15,900 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

2 நாள் பயணமாக சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்பம் தொகுதிக்கு வந்தார் நாயுடு. இதில் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை அனைத்து துறை அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசியதாவது:

மாநிலத்தில் உள்ள 22 மாவட் டங்களில் 116 நாட்கள் பாதயாத் திரை சென்றதன் மூலம் மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்துள் ளேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து ஆட்சியை அளித்துள்ள னர். மக்களுக்கு சேவை செய்ய அதிகாரிகள் ஒருபோதும் தயங்கக் கூடாது.

காங்கிரஸ் கட்சி, மாநிலத்தை முறையாக பிரிக்கவில்லை.

ஆந்திராவுக்கு நிதிப் பற்றாக் குறை உள்ளது. மாநிலப் பிரிவினையால், ரூ. 15,900 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைநகரம் அமைக்க மத்திய அரசிடம் நிதி கேட்டுள் ளோம். இதற்கு உதவுவதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

தேர்தலில் மக் களுக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் கட்டாயம் நிறைவேற்றுவோம். இதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in