

சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் ரவீந்தரநாத் தாகூரால் தோற்றுவிக்கப்பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஷாந்தா தத்தா குப்தாவின் பதவிக் காலத்தின் போது, நியமனங்களில் பல்கலைக் கழக மானியக் குழு நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசிட மிருந்து பரிந்துரை வந்ததைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக, சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷ்யாமளா ரே நாயர் துணைப்பதிவாளராக நியமிக்கப் பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப் படவில்லை என முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.