

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் உருவத்தை வயல்வெளியில் பயிர்கள் மூலம் வடிவமைத்து, ‘இந்தியாவில் பயிர் செய்வோம்’ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபடச் செய்வதற்காக பிரதமர் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என வலியுறுத்தி பரத்சிங்கா கிராமத்தில் இந்த ஓவியத்தை விவசாயிகள் வடிவமைத்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயி ஸ்வேதா பட்டாத் கூறும்போது, “பேனா முனைக்கு இருக்கும் வலிமை கலைக்கும் உள்ளது. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை வலியுறுத்திப் பேசி வரு கிறார். அவர், இந்தியாவில் பயிர் செய்வோம் திட்ட பிரச்சாரத்தையும் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். விவசாயிகள் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இளைஞர்கள் விவ சாயிகளாக விரும்புவதில்லை. எனவே, அவர்களை ஊக்குவிக்க வேண்டும்” என்றார்.
பிரதமர் மோடியின் உருவத்தைக் கொண்ட இந்த ஓவியம் 7,200 சதுர அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பெரிய பயிர் ஓவியமாகக் கருதப்படுகிறது.
விவசாயிகளும், ஓவியர்களும் மூன்று மாதங்களாக உழைத்து இதனை உருவாக்கியுள்ளனர். இந்த ஓவியத்தில், ‘டியர் பிரதமர், தயவு செய்து இந்தியாவில் விளை விப்போம்’ என்ற வாக்கியத்தையும் அமைத்துள்ளனர்.
விவசாயிகள் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளனர். அதில், உள்நாட்டு பாரம்பரிய விதைகள் கிடைக்காதது, பூச்சிக் கொல்லி தட்டுப்பாடு, இயற்கை விவசாயத் தின் தேவை குறித்து குறிப்பிட் டுள்ளனர்.
விவசாயி வசந்த் புட்டானே கூறும்போது, “கடந்த 30 ஆண்டு களாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உள்நாட்டு பாரம்பரிய விதைகள் கிடைப்பது கடினமாக உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
7,200 சதுர அடியில் வடிவமைக் கப்பட்டுள்ள பயிர் ஓவியம் பலரை ஈர்த்து வருகிறது. பிரதமர் இதனைக் கவனிப்பார் என்றும், விவசாயத்தை லாபகரமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை அவர் எடுப்பார் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.