

வடகிழக்கு பிராந்திய காமன்வெல்த் பார்லிமென்டரி அசோசியேஷன் 3 நாள் மாநாடு திரிபுரா தலைநகர் அகர்தலாவில் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ளது. இம்மாநாட்டை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தொடங்கி வைக்க உள்ளார்.
திரிபுரா சட்டப்பேரவையில் நடைபெறும் இந்த 3 நாள் மாநாட்டில் வடகிழக்கு மாநிலங்களின் சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள் கலந்துகொள்கின்றனர். நெர்க்பா அமைப்பை வலுப்படுத்துவது குறித்த விவாதமும், வடகிழக்கு இந்தியாவில் ஏற்படும் மண் அரிப்பு, மக்களின் வாழ்க்கையில் அதனால் ஏற்படும் விளைவுகள், அதற்கான தீர்வுகள் குறித்த மற்றொரு விவாதமும் நடைபெற உள்ளது.