Published : 19 May 2016 09:08 AM
Last Updated : 19 May 2016 09:08 AM
மேற்கு வங்க சட்டப்பேரவை 294 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 41 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரிகள் 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
கேரளா:
கேரளாவில் 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் இடது ஜனநாயக முன்னணி 69 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 53 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அசாம்:
அசாமில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் பாஜக 25 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் ஏ.யு.டி.எஃப். 2 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT