நாடாளுமன்றம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

நாடாளுமன்றம் அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு
Updated on
1 min read

நாடாளுமன்றம் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது சடலம் இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டது.

இது குறித்து போலீஸார், "இன்று காலை 7.15 மணியளவில் நாடாளுமன்றத்துக்கு மிக அருகே விஜய் சவுக் - ரயில் பவன் இடையே ஊடக வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் 39 வயது நபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கைப்பற்றப்பட்டது.

அந்த நபரிடம் இருந்து தற்கொலை குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த தகவலின்படி தற்கொலை செய்து கொண்ட நபர் ராம் தயாள், மத்தியப் பிரதேசம் மாநிலம் சிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

அவருடைய உறவினர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in