Published : 24 May 2022 04:37 AM
Last Updated : 24 May 2022 04:37 AM
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள சாம்ராஜ்பேட்டை காங்கிரஸார் சார்பில் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் ஈத் மிலன் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் சாம்ராஜ்பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது, பட்டியலின மடாதிபதி நாராயண சுவாமி ஆகியோர் விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது இனிப்பை எடுத்து பட்டியலின மடாதிபதிக்கு ஊட்டினார். பதிலுக்கு மடாதிபதி கீழே வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து ஜமீர் அகமதுவுக்கு ஊட்ட முயன்றார். அப்போது சாமியாரை தடுத்த எம்எல்ஏ ஜமீர் அகமது மடாதிபதியின் வாயில் மென்ற எச்சில் உணவை எடுத்து தனக்கு ஊட்டுமாறு கூறினார். அப்போது தயங்கிய மடாதிபதியை உரிமையுடன் அவரது கையை பிடித்து எச்சில்பட்ட உணவை ஊட்ட செய்தார்.
இதையடுத்து மடாதிபதி ஊட்டிய எச்சில் உணவை எம்எல்ஏ ஜமீர் அகமது மைக் எடுத்து, '' நானும் அவரும் அண்ணன் தம்பி. நாமெல்லாம் மனிதர்கள். இந்த சாதி, மதம் ஆகியவற்றால் நம்மை பிரிக்க முடியாது'' என ஆவேசமாக பேசினார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தலித் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT