

கொல்கத்தாவில் உள்ள ஐஐசிபி கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக பணிபுரியும் ஜீஜா கோஷ், 2012ம் ஆண்டில் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக, கொல்கத்தாவில் இருந்து கோவாவுக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் புறப்பட்டார்.
பெருமூளை வாத நோயால் பாதிக்கப் பட்டிருப்பதால் அவரால் பயணிக்க முடியாது என விமானத்தின் பைலட் அனுமதி மறுத்துவிட்டார். மன உளைச் சலுக்கு ஆளான ஜீஜா கோஷ், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜீஜா கோஷுக்கு, ரூ.10 லட்சம் நஷ்டஈடு தர ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்க நேற்று தீர்ப்பளித்தது.