

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் சுற்றித் திரிந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சஜீத் அகமது, சமீர் அகமது மற்றும் ஷகிர் அன்சாரி என்ற அந்த 3 தீவிரவாதிகளின் நடமாட்டத்தையும் மத்திய உளவுத் துறையும், டெல்லி போலீஸாரின் சிறப்பு பிரிவும் கடந்த ஒரு வருடமாக தீவிரமாக கண்காணித்து வந்தது.
மூவரும் இணையதளம் வாயிலாக தங்களது சதித் திட்டங்களை அவ்வப்போது பகிர்ந்து கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியை தகர்க்கும் நோக்கில் அதி நவீன வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக குண்டுவெடித்ததில் சஜீத்தின் கையில் பலத்த காயமடைந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு மூன்று பேரையும் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 10 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.