பனாமா பேப்பர்ஸ் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு: பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு

பனாமா பேப்பர்ஸ் குறித்து சிபிஐ விசாரணை கோரி மனு: பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு
Updated on
1 min read

மத்திய அமெரிக்காவின் பனாமா நாட்டை சேர்ந்த சட்ட நிறுவனம் ஒன்றின் உதவியுடன், பல நாடு களில் முக்கிய பிரபலங்கள் பலர் சொத்துகளை பதுக்கி உள்ளனர். பனாமா நிறுவனத்தின் பாதுகாப்பில் இருந்த இந்த ஆவணங்களை, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் சர்வதேச செய்தியாளர்கள் சங்கத் தினர் வெளியிட்டனர்.

இதில் இந்தியாவின் பாலிவுட் நடிகர்அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

பின்னர் இந்த மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசு மற்றும் சிபிஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in