

பலாத்கார வழக்குகளின் விசா ரணை, தீர்ப்புகளில் பாதிக்கப் பட்ட பெண்களின் பெயரை குறிப் பிடக்கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டில் டெல்லியில் 7 வயது சிறுமியை மான பங்கம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு விசா ரணை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.பி. கார்க் கூறியதாவது: மான பங்க வழக்கில் செஷன்ஸ் நீதிபதி தனது தீர்ப்பில் பாதிக்கப்பட்ட சிறுமி யின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பொதுவாக பலாத்காரம், மானபங்க வழக்குகளின் விசா ரணை, தீர்ப்புகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை குறிப்பி டக்கூடாது. போலீஸ் விசாரணை அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாமல் இருக்க அவர்களின் அடையாளத்தை பகிரங்கமாக வெளியிடக்கூடாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இளைஞரின் ஓராண்டு சிறையை உறுதி செய்த நீதிபதி அவரின் மனுவை தள்ளுபடி செய்தார்.