

உடல்நலக்குறைவு காரணமாக கேரள தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ரத்து செய்துள்ளார்.
வரும் 16-ம் தேதி கேரள சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள் ளது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நேற்று காலை முதல் கேரளத்தில் பிரச்சாரம் மேற்கொள் வதாக இருந்தது. திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டம் கோட்டாரக் கரா ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், உடல்நலக் கோளாறு காரணமாக அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கேரள சட்டப்பேரவை தொகுதி யில் இதுவரை பாஜக வென்றதே யில்லை. அக்குறையைப் போக்க மிகத் தீவிர பிரச்சாரம் செய்துவரு கிறது. கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
பிரதமர் மோடி கேரளாவில் வரும் 6-ம் தேதி முதல் 6 பொதுக்கூட்டங் களில் பங்கேற்பார் என அறிவிக்கப் பட்டுள்ளது.