சில மாநிலங்களில் குறைந்து வரும் கரோனா தடுப்பூசி பயன்பாடு: மத்திய அரசு கவலை

சில மாநிலங்களில் குறைந்து வரும் கரோனா தடுப்பூசி பயன்பாடு: மத்திய அரசு கவலை
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டில் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடியனார். அப்போது பேசிய அவர், தற்போது மந்த நிலையில் உள்ள தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க உந்துதல் தேவை என்று எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்வதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன், ஜூலை மாதங்களில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை மாநில சுகாதாரத்துறை முன்னெடுக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வீடு, வீடாக சென்று அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்

தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்தவில்லை என்பதையும், தடுப்பூசிகள் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in