திருப்பதியில் கங்கையம்மன் திருவிழா தொடக்கம்

திருப்பதியில் கங்கையம்மன் திருவிழா தொடக்கம்
Updated on
1 min read

திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் கோலாகலமாக நடத்தப் படும் கங்கையம்மன் திருவிழா தொடங்கியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் சித்திரை அல்லது வைகாசி மாதத்தில் நூறு ஆண்டு களுக்கும் மேலாக கங்கையம்மன் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிராம தேவதையான கங்கையம்மனை வழிபடும் இவ் விழாவினை முன்னிட்டு சித்தூர் மாவட்டத்தில், சித்தூர், திருப்பதி, குப்பம், காளஹஸ்தி, புங்கனூர், மதனபல்லி, பலமனேர் என ஒவ்வொரு பகுதியாக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

சித்தூர் மற்றும் திருப்பதியில் வரும் 17-ம் தேதி கங்கையம்மன் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை இரவு பறைசாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

விழாவையொட்டி திருப்பதி தாத்தய்ய குண்டா கங்கையம்மன் கோயிலுக்கு பக்தர்கள் விதவித மான வேடங்கள் அணிந்து அம்மனை தரிசித்து வருகின்றனர். நேற்று பக்தர்கள் கரும்புள்ளி, செம்புள்ளி வேடமிட்டு அம்மனை வழிப்பட்டனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு கோயில் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in