ஜூன் 4-ம் தேதி முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: பிரதமர் நரேந்திர மோடி திட்டம்

ஜூன் 4-ம் தேதி முதல் 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்: பிரதமர் நரேந்திர மோடி திட்டம்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான், கத்தார், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு, ஜூன் 4-ம் தேதி முதல் பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தை ஆப்கானிஸ்தானில் இருந்து தொடங்கும் மோடி, அங்கு, இந்திய நிதியுதவியுடன் ரூ.1,400 கோடியில் கட்டப்பட்ட அணையை திறந்து வைக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து கத்தாருக்குச் சென்று, மன்னர் ஷேக் தமின் பின் ஹமாத் அல்-தானியுடன் பொருளாதார உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார்.

2 நாட்கள் கத்தாரில் தங்கி யிருந்துவிட்டு, ஸ்விட்சர்லாந் துக்கு செல்லும் நரேந்திரமோடி, இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு விவரங்களை, வெளிக் கொண்டுவர உதவுமாறு, அதிபர் ஜோஹன் ஷ்னீடர் அம்மானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

இந்தியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கு இடையே, வரி உள்ளிட்ட விவரங் களை, தானியங்கி முறையில் பரிமாறிக்கொள்ளும் திட்டத்தை இறுதிசெய்யும் பணியில் இரு நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ள னர். அதிபர் ஜோஹனை சந்தித்த பின் இதுதொடர்பான அறிவிப்பை நரேந்திரமோடி வெளியிடுவார் எனத் தெரிகிறது.

ஸ்விட்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூன் 7-ம் தேதி மோடி அமெரிக்கா செல் கிறார். ராணுவம், பாதுகாப்பு, எரிசக்தி சம்பந்தப்பட்ட துறை களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அதிபர் ஒபாமாவுடன் பேசுவார். அமெரிக்க நாடாளு மன்றத்தின் கூட்டு கூட்டத்திலும் நரேந்திரமோடி பேச உள்ளார்.

பின்னர், மெக்சிகோ சென்று, அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீடோவை சந்தித்து பேசுவார். அப்போது, வர்த்தக உறவு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in