Published : 19 May 2022 05:08 AM
Last Updated : 19 May 2022 05:08 AM

பொருளாதார விவகாரத்தில் இலங்கை நிலைதான் இந்தியாவிலும் உள்ளது - காங். முன்னாள் தலைவர் ராகுல் கருத்து

புதுதில்லி: வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.

இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரங்கள் ஆகியவற்றின் 6 வரைபடங்களை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ஒப்பீடு செய்துள்ளார்.

இந்த 3 விஷயத்திலும், இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இந்தியாவிலும், இலங்கையிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து 2020-ம் ஆண்டில் உச்சம் அடைந்திருப்பதை முதலாவது வரைபடம் காட்டுகிறது.

இரு நாட்டிலும் எரிபொருள் விலை கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை உயர்ந்துள்ளதை 2-வது வரைபடம் காட்டுகிறது. கடந்த 2020-21-ம் ஆண்டில் இரு நாடுகளிலும், மதவன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதை 3-வது வரைபடம் காட்டுகிறது.

மக்களை திசை திருப்புவதால், உண்மைகள் மாறாது. இலங்கையின் நிலைதான் இந்தியாவில் உள்ளது என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x