Published : 20 May 2016 09:37 AM
Last Updated : 20 May 2016 09:37 AM

கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது இடதுசாரி: சட்டப்பேரவைத் தேர்தலில் 140-ல் 91 இடங்களைக் கைப்பற்றி

கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணி மொத்தம் உள்ள 140-ல் 91 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

கேரள சட்டப்பேரவைக்கு கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எல்டிஎப் 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் இந்தக் கூட்டணி சார்பில் சுயேச்சையாக போட்டி யிட்டு வெற்றி பெற்ற 6 பேரும் அடங்குவர்.

எல்டிஎப் முதல்வர் வேட்பாளர்களாக கருதப்படும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் களான பினராயி விஜயன் (தர்மதம்) மற்றும் வி.எஸ்.அச்சுதானந்தன் (93) ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ள னர். இதுதவிர, தாமஸ் ஐசக், இ.பி.ஜெயராஜன் மற்றும் நடிகர் முகேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

செபாஸ்டியன் பால் மற்றும் நிகேஷ் குமார் ஆகியோர் எல்டிஎப் சார்பில் தோல்வி அடைந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (யுடிஎப்) 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. ஒரு இடத்தில் பாஜகவும் மற்றொரு இடத்தில் இதர கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் கட்சி தோல்வி அடைந்தா லும், முதல்வர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள் ரமேஷ் சென்னிதாலா, பி.கே.குன்ஹாலிகுட்டி, அடூர் பிரகாஷ், அனூப் ஜேக்கப், எம்.கே.முன்னெர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.எம்.மாணி உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

சபாநாயகர் தோல்வி

யுடிஎப் சார்பில் தோல்வி அடைந்த வர்களில், அமைச்சர்கள் கே.பாபு, ஷிபு ஜான், கே.பி.மோகனன், பி.கே.ஜெயலட்சுமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சுதாகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். சபாநாயகர் என்.சக்தன் மற்றும் துணை சபாநாயகர் பலோட் ரவி, அரசு தலைமை கொரடா தாமஸ் உன்னியாடன் ஆகியோரும் தோல்வியடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x