உத்தராகாண்டில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல்

உத்தராகாண்டில் பாஜக எம்.பி தருண் விஜய் மீது தாக்குதல்
Updated on
1 min read

உத்தராகண்டில் உள்ள சில்கூர் தேவதா கோயிலுக்குச் சென்று திரும்பும்போது பாஜக எம்.பி. தருண் விஜய் மீதும் அவருடன் இருந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தவுலத் குன்வாரும் தாக்கப்பட்டனர்.

கும்பல் தாக்குதலில் சிக்கிய எம்.பி. தருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து, டேராடூன் போலீஸ் எஸ்.பி. டி.டி.வைலா கூறும்போது, "ஜவுன்சார் பகுதி தலித் மக்களை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என தருண் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை சக்ரதாவில் உள்ள சில்கூர் தேவதா கோயிலுக்கு பாஜக எம்.பி. தருண் விஜய் சென்றார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தவுலத் குன்வாரும் சென்றிருந்தார்.

அவர்கள் இருவரும் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது, கோயிலுக்கு வெளியே இருந்து 2000-க்கும் மேற்பட்டோர் கற்களை வீசி எறிந்தனர். எம்.பி.யின் காரை சேதப்படுத்தி அதை பள்ளத்தில் தள்ளிவிட்டுள்ளனர்.

அவர்கள் எதற்காக அவ்வாறு செய்தார்கள் என்ற காரணம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சில்கூர் தேவதா கோயிலுக்குள் ஏற்கெனவே தலித்துகள் அனுமதிக்கப்படுவதால், பகுஜன் சமாஜ் தலைவர் தவுலத் குன்வார் கோயிலுக்குள் சென்றதற்காக இந்தத் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை. சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in