

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி அமர்வு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கியது. இத்தொடர் நேற்று நிறைவடைந்தது. நேற்று மாநிலங்களவையின் 53 உறுப்பினர்களுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
நிறைவுரையில் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி பேசிய தாவது:
இந்த அமர்வில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன அல்லது திருப்பி அனுப்பப்பட்டன. நிதி மசோதா, திவால் மசோதா உள் ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. எனினும் காங்கிர ஸின் எதிர்ப்பு காரணமாக ஜிஎஸ்டி மசோதா நிலுவையிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவிததார்.
மாநிலங்களவை மொத்தம் 69 மணி நேரம் கூடியது. இதில், அகஸ்டாவெஸ்ட்லேண்ட், உத்தராகண்ட் ஆட்சிக் கலைப்பு, ஜார்க்கண்டில் முஸ்லிம்கள் மீது தாக்குதல், குஜராத் எண்ணெய் துரப்பண முறைகேடு உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக 19 மணி நேரம் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன.
எனினும் பேரவை மற்றும் இதர முக்கிய அலுவல்களை முடிப்பதற்காக கூடுதலாக 10 மணி நேரம் அவை நடத்தப்பட்டது.
நிதி மோசடி குற்றச்சாட்டு காரணமாக விஜய் மல்லையா தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். 6 தனி நபர் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில், ஆந்திரப்பிரதேசம் திருத்தியமைப்பு மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டது. ஆனால், முடிவு காணப் படவில்லை.
அசாம், இமாச்சலப்பிரதேசம், கேரளா, நாகாலாந்து, பஞ்சாப், திரிபுரா மாநிலங்களிலிருந்து 13 புதிய அல்லது மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். மேலும் 6 புதிய நியமன உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.