

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டம் கொரனஹள்ளியை சேர்ந்த 21 வயது தலித் பெண் ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சிக்கபள்ளாப்பூரில் உள்ள தனது நண்பரை சந்திக்க கடந்த 20-ம் தேதி சென்றார். அன்றிரவு ஹொசனஹள்ளி பேருந்து நிலை யத்தில், ஆட்டோ ஓட்டுநர் சிவா விடம் ரம்யா வழி கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோவில் அழைத்து சென்று விடுவதாகக் கூறி, தனி மையான பாழடைந்த வீட்டுக்கு அவரை கடத்தி சென்றுள்ளார் சிவா.
அங்கு சிவா மற்றும் அவரது நண்பர்கள் 2 நாட்கள் ரம்யாவை அந்த வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 23-ம் தேதி இரவு அங்கிருந்து தப்பிய ரம்யாவை சிலர் மீட்டு சந்தவனா கேந்திரா தொண்டு நிறுவனத்தில் சேர்த்துள் ளனர். தொண்டு நிறுவன தலைவர் நாராயணப்பாவிடம் ரம்யா, நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து 24-ம் தேதி ஹொசன ஹள்ளி காவல் நிலையத்தில் ரம்யா புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் ஆட்டோ ஓட்டுநர்களான சிவா, சசிதர், ரமேஷ் பாபு, கிரீஷ் ஆகிய நால்வரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.