Published : 17 May 2022 06:12 AM
Last Updated : 17 May 2022 06:12 AM

டெல்லியில் 120 டிகிரி வெயில்: கடும் வெப்பத்தால் பொதுமக்கள் அவதி

புதுடெல்லி: டெல்லி மற்றும் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. டெல்லியிலும் உத்தர பிரதேசத்திலும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. டெல்லியில் உள்ள முன்கேஷ்பூர் பகுதியில் வெயில் 120.56 டிகிரி நஜாப்கார் பகுதியில் 120.38 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், வெயிலால் தவித்த டெல்லி மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியாணா பகுதியில் காணப்படும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாகவும் இதனால் பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று இடியுடன் கூடிய மழை அல்லது புழுதிப் புயலுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தது. வெப்பம் குறைந்ததால் டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x