கேரளாவில் இன்று வாக்குப்பதிவு: பாதுகாப்பு பணியில் 52,000 போலீஸார்

கேரளாவில் இன்று வாக்குப்பதிவு: பாதுகாப்பு பணியில் 52,000 போலீஸார்
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கவுள்ளது.

கேரளாவில் மொத்தம் உள்ள 140 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளர் களாக முதல்வர் உம்மன் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, மார்க்சிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன், முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மாணி, பாஜக மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜ கோபால், முன்னாள் கிரிக்கெட் வீரர் சாந்த் உட்பட மொத்தம் 1,203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 109 பேர் பெண் வேட்பாளர் கள். 2.61 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். பாதுகாப்பு பணியில் 52 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மார்க்சிஸ்ட் தலைமை யிலான இடதுசாரி ஜனநாயக முன் னணிக்கு சாதகமாக வெளியாகி யுள்ள நிலையில், மாறி, மாறி வரும் ஆட்சி மாற்றத்துக்கு இந்த முறை முற்றுப்புள்ளி வைத்து புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அதே சமயம் உள்ளாட்சித் தேர்த லில் கிடைத்த மகத்தான வெற்றியை தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர் தலிலும் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று கேரளாவில் வலு வாக காலூன்றுவோம் என பாஜக வும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல், 2ஜி, 3ஜி, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் சோலார் ஊழல்களை மையப் படுத்தி எதிர்க்கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டன.

2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்திருப்பதால், கேரள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவது காங்கிரஸுக்கு மிகுந்த கவுரவ பிரச்சினையாக கருதப் படுகிறது. திரிபுரா மாநிலத்தில் மட்டுமே தற்போது இடதுசாரி ஆட்சி நடப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in