ஊழல், மதவாத அரசியலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: இடதுசாரி தலைவர்கள் கருத்து

ஊழல், மதவாத அரசியலுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு: இடதுசாரி தலைவர்கள் கருத்து
Updated on
1 min read

கேரள பேரவைத் தேர்தலில் எல்டிஎப் அமோக வெற்றி பெற் றுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கொடியேறி பால கிருஷ்ணன் கூறியதாவது:

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி (யுடிஎப்) தோல்வி அடைந்துள் ளது. காங்கிரஸ் ஒருசில இடங் களில் மட்டுமே வெற்றி பெற் றிருக்க வேண்டும். ஆனால், கூட் டணிக் கட்சிகளின் தயவால் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிரா கவே மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கி உள்ளது. அக்கட்சிக்கு ஆதர வாக காங்கிரஸார் வாக்களித் துள்ளனர்.

அடுத்து அமைய உள்ள இடதுசாரிகள் கூட்டணி அரசு மாநில மக்களின் நலனுக் காக செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறும்போது, “மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மக்கள் விரோத கொள்கைகளை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றியது. மேலும் பெண் களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மாநில அரசு தவறிவிட்டது. இதற் கெல்லாம் பாடம் புகட்டும் வகை யில் மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்” என்றார்.

மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினரும் மூத்த தலைவரு மான பினராயி விஜயன் கூறும் போது, “இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளனர். இந்தத் தேர்தலில் மதவாத அரசி யலை மக்கள் புறக்கணித்துள்ள னர். அதேநேரம் இடதுசாரிகளின் வளர்ச்சி அரசியலுக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கனம் ராஜேந்திரன் கூறும்போது, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நடைபெற்ற ஊழலுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள் ளனர்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in