Last Updated : 28 May, 2016 10:42 AM

 

Published : 28 May 2016 10:42 AM
Last Updated : 28 May 2016 10:42 AM

ரசாயன தொழிற்சாலை விபத்து பலி எண்ணிக்கை 11ஆக அதிகரிப்பு: நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு பதிவு

மும்பை அருகே ரசாயனத் தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பால் ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை, 11-ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே டோம்பிவளி டவுன்ஷிப் பகுதியில், சிவாஜி உத்யோக் நகரில் இயங்கி வந்த ரசாயனத் தொழிற்சாலையில், கடந்த வியாழக்கிழமை, பாய்லர் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது.

மீட்புப் படையினர் கடுமை யாக போராடி தீயை அணைத் தனர். எனினும், தீயில் கருகி யும், கட்டிட இடிபாடுகளில் சிக்கி யும், 5 தொழிலாளர்கள்இறந்தனர். மேலும் பெண் தொழிலாளர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந் தனர். நேற்று இரண்டாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்தபோது, இடி பாடுகளுக்கு இடையில் இருந்து மேலும் சில சடலங்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து தானே மாவட்ட ஆட்சியர் மகேந்திர கல்யாண்கர் கூறும்போது, ‘‘தொழிற்சாலை விபத்தில் மேலும் சிலர் பலி யாகியுள்ளார். இதுவரை, 11 பேர் இறந்தது தெரியவந்துள்ளது. மேலும், 159 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் மட்டுமின்றி, கட்டிடத்தின் அருகில் இருந் தவர்களும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து மீட்புப் பணிகள் தொ டர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. விபத்து தொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது’’ என்றார்.

இதற்கிடையே, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் முறையாக மேற்கொள்ளப்பட் டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய டோம்பிவளி பகுதியில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை களை ஒரு வார காலத்துக்கு செயல்படாமல் நிறுத்தி வைக் கப்படும் என, மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x