போர்க்கப்பல் உதயகிரி - கோப்புப்படம்
போர்க்கப்பல் உதயகிரி - கோப்புப்படம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க்கப்பல்கள்: மும்பையில் நாளை அறிமுகம்

Published on

புதுடெல்லி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 15பி வகையைச் சேர்ந்த 'சூரத்' என்ற போர்க்கப்பலும், 17ஏ வகையைச் சேர்ந்த 'உதயகிரி' என்ற போர்க்கப்பலும் செவ்வாய்கிழமை (நாளை) அறிமுகம் செய்யப்படுகிறது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூரத், உதயகிரி போர்க் கப்பல்கள் மே 17-ம் தேதி மும்பையின் மாஸ்காவோன் கப்பல்துறை நிறுவனத்தில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

சூரத் ப்ராஜெக்ட் 15பி-யின் நான்காவது போர்க்கப்பலாகும். அதேபோல உதயகிரி ப்ராஜெக்ட் 17ஏ போர்க்கப்பல்களின் மூன்றாவது கப்பலாகும்.

நாட்டில் போர்க்கப்பல்களின் வடிவமைப்புப் பணியில் தலைசிறந்து விளங்கும் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் இந்த இரண்டு கப்பல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

தற்சார்பு இந்தியாவிற்கு சான்றளிக்கும் வகையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உட்பட உள்நாட்டு நிறுவனங்களின் 75 சதவீதம் கருவிகளுக்கு உற்பத்தி ஆணைகள் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in